தேசிய செய்திகள்

தமிழக நீரின் தரம் குறித்த ஆய்வு - வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் ப்ளூரைடு மற்றும் ஆர்சனிக் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது, மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி பிஸ்வேஷ்வர் துடு, கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் மூலம் நாடு முழுவதும் நிலத்தடி நீரின் தரம் குறித்து ஆய்வு செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் முடிவுகளின்படி, 23 மாநிலங்களைச் சேர்ந்த 370 மாவட்டங்களில் ப்ளூரைடு (Fluoride) அளவு அதிகமாக இருப்பதாகவும், 21 மாநிலங்களைச் சேர்ந்த 152 மாவட்டங்களில் ஆர்சனிக் (Arsenic) அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிக அளவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், மதுரை, சேலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, திருவண்ணாமலை, திருச்சி, நெல்லை, திருப்பூர், வேலூர், கடலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ப்ளூரைடு அளவு அனுமதிக்கப்பட்டதை விட லிட்டருக்கு 1.5 மில்லி கிராம் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர், கடலூர், நாகை, ராமநாதபுரம், திருவள்ளூர், நெல்லை, தூத்துக்குடி, திருச்சி, திருவாரூர் மாவட்டங்களில் ஆர்சனிக் அளவி லிட்டருக்கு 0.01 மில்லி கிராம் அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...