தேசிய செய்திகள்

திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் -தமிழிசை

திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம் என தமிழிசை கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமியை தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சந்தித்து பேசினார். கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், திருவாரூரில் இடைத்தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் போகலாம். திருவாரூரில் தேர்தலை சந்திக்க மு.க.ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது. இடைத்தேர்தலைவிட மக்களவை தேர்தலில் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு