தேசிய செய்திகள்

குஜராத்திற்கு சென்ற டாடா ஏர்பஸ் விமானம் தயாரிப்பு ஆலை; மராட்டிய எதிர்க்கட்சிகள் விமர்சனம்

போர் விமானம் தயாரிக்கும் திட்டம் குஜராத் மாநிலம் வதோத்ராவுக்கு சென்று உள்ளது.

தினத்தந்தி

நாக்பூர்,

ஐரோப்பாவின் ஏர்பஸ் மற்றும் டாடா நிறுவனம் இணைந்து இந்திய விமான படைக்கு சி-295 ரக போர் விமானங்களை தயாரிக்க உள்ளது. இந்த ஆலை மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகில் அமைய இருந்தது. இதற்கான முயற்சியில் மாநில அரசு ஈடுபட்டு வந்தது.

இந்தநிலையில் போர் விமானம் தயாரிக்கும் திட்டம் குஜராத் மாநிலம் வதோத்ராவுக்கு சென்று உள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று ராணுவ அமைச்சகம் வெளியிட்டது. ரூ.22 ஆயிரம் மதிப்பிலான இந்த திட்டத்தை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைக்க உள்ளார். நாட்டில் முதல் முறையாக தனியார் நிறுவனம் விமானப்படைக்கான விமானங்களை தயாரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் தான் மராட்டியத்துக்கு வர இருந்த வேதாந்தா நிறுவன ஆலை திட்டம் குஜராத்துக்கு சென்றது. இந்தநிலையில் டாடா-ஏர்பஸ் திட்டமும் குஜராத் மாநிலத்துக்கு சென்ற விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித்து உள்ளன. 

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு