புதுடெல்லி,
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவை 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டாடா குழுமத்தின் டாலசி பிரைவெட் லிமிட்டெட் என்ற நிறுவனம் வாங்கியது. ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் நிர்வாக இயக்குநராகவும் கேம்ப்பெல் விலசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியூசிலாந்தைச் சேர்ந்த கேம்ப்பெல் விலசன்விமானப் போக்குவரத்துத் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். இதற்கு முன் சிங்கப்பூரில் உள்ள ஸ்கூட் விமான சேவை நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.
முன்னதாக, டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் அதிகாரியான இல்கர் ஐசியை நியமிக்க டாடா சன்ஸ் நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.