புதுடெல்லி,
ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 38-வது கூட்டம் டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் மற்றும் வணிகவரித்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஜெயகுமார் தமிழகத்துக்கு வரவேண்டிய 2017-2018-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. தொகை மற்றும் ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மேலும், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் மீது வரி விதிக்கப்படுவது சாதாரண மக்களை பாதிக்கும் என்பதால், தற்போது விதிக்கப்படும் 18 சதவீத வரியை முழுமையாக நீக்கி, வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.