தேசிய செய்திகள்

குஜராத்தை சேர்ந்தவைர ஏற்றுமதி நிறுவனத்தில் வருமான வரி சோதனை; ரூ.518 கோடி மோசடி நடந்தது கண்டுபிடிப்பு

குஜராத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி வைர ஏற்றுமதி நிறுவனம் பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது.

தினத்தந்தி

இதைத்தொடர்ந்து குஜராத் மற்றும் மராட்டியத்தில் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான 23 இடங்களில் கடந்த 22-ந் தேதி முதல் அதிரடி சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையின்போது கணக்கில் வராத ரூ.1.95 கோடி, ரூ.10.98 கோடி மதிப்புள்ள 8,900 காரட் வைரம் போன்றவை வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த நிறுவனத்துக்கு சொந்தமான ஏராளமான லாக்கர்கள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சோதனையில் மேற்படி நிறுவனம் கணக்கில் வராத வகையில் ரூ.518 கோடி அளவுக்கு பட்டை தீட்டப்பட்ட சிறு வைரங்களின் விற்பனை மற்றும் கொள்முதலில் ஈடுபட்டு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.189 கோடிக்கு வைரங்களை கொள்முதல் செய்துள்ள இந்த நிறுவனம், ரூ.1,040 கோடிக்கு விற்பனை செய்துள்ளதாகவும் அந்த வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு