தேசிய செய்திகள்

காதலுக்காக..! பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து மாணவியை மணந்த ஆசிரியை!

காதலில் எல்லாம் நியாயமானது, அதனால் தான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்

தினத்தந்தி

ஜெய்ப்பூர்

ராஜஸ்தான் மாநிலம், பரத்பூரில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றுபவர் மீரா. இவர் விளையாட்டுகள் குறித்த பயிற்சி அளித்து வருகிறார். பயிற்சியின் போது கல்பனா பவுஸ்தார் என்ற மாணவியை சந்தித்துள்ளார். கல்பனா, மாநில அளவில் கபடிப் போட்டிகளில் விளையாடியவர். இவர் சர்வதேச கபடிப் போட்டிக்காக ஜனவரி மாதம் துபாய் செல்ல உள்ளார் என்று கூறப்படுகிறது.

கல்பனா மீது மீரா, காதல் வயப்பட்டுள்ளார். மாணவியும் அவரை விரும்பி உள்ளார். இந்நிலையில், மாணவியைத் திருமணம் செய்து கொள்வதற்காக, பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

தற்போது, ஆரவ் குந்தல் என்று தன்னுடைய பெயரை மாற்றி உள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆரவ் தெரிவிக்கையில், ``காதலில் எல்லாம் நியாயமானது, அதனால் தான் என் பாலினத்தை மாற்றிக் கொண்டேன்.

நான் ஒரு பெண்ணாகப் பிறந்தேன், ஆனால் எப்போதும் என்னை நான் ஆணாகவே நினைத்தேன். பாலினத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என விரும்பினேன். எனது விருப்பப்படி 2019 டிசம்பர் மாதம், எனது முதல் அறுவை சிகிச்சையை மேற்கொண்டேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து கல்பனா கூறுகையில்,``ஆரவ்வை நான் ஆரம்பம் முதலே விரும்பி வந்தேன். அதனால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டம் அவரை திருமணம் செய்து கொண்டேன். அவர் சிகிச்சையின் போது நானும் அவருடன் சென்றிருந்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.

இவர்களின் திருமணத்தை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு நடத்தி வைத்துள்ளனர். கிராம மக்களின் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்