ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள நீர்ஜா மோடி பள்ளியில் பணிபுரிந்து வந்த ஆசிரியை நபீசா அட்டாரி. இவர், டி20 போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில், அதனை நாம் வெற்றி பெற்று விட்டோம் என வாட்ஸ்அப்பில் பதிவிட்டுள்ளார்.
இந்த தகவல் பள்ளி நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. நபீசா அட்டாரி பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் செய்தி பரப்பிய காரணத்திற்காக அவரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.
பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கும் வகையிலான அவரது பதிவை அடுத்து, மாணவர்களுக்கு வகுப்பில் அவர் என்ன பயிற்றுவிப்பார்? என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.