பரேலி,
உத்தர பிரதேசத்தின் பரேலி நகரில் தங்களது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த டீன் ஏஜ் சிறுமியை பாம்பு ஒன்று கடித்து விட்டது. இதற்காக சிகிச்சை பெற கடந்த 5 நாட்களுக்கு முன் தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில், டீன் ஏஜ் சிறுமி தனியாக இருந்த ஐ.சி.யூ. பிரிவில் மருத்துவமனை சீருடை அணிந்தபடி ஊழியர் மற்றும் கூட்டாளிகள் 4 பேர் உள்ளே நுழைந்தனர். சிறுமிக்கு கட்டாயப்படுத்தி ஊசி போட முயன்றுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை வாயை பொத்தி, கைகளை கட்டி போட்டனர்.
அதன்பின் கும்பலாக அந்த சிறுமியை கற்பழித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதுபற்றி பொது வார்டுக்கு மாற்றப்பட்ட பின்னர் தனது பாட்டியிடம் சிறுமி தெரிவித்துள்ளார். அவர் மருத்துவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அதன்பின் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
இதில் மருத்துவமனை ஊழியரை கைது செய்த போலீசார் தப்பியோடிய மற்ற 4 பேரை தேடி வருகின்றனர்.