தேசிய செய்திகள்

கஞ்சா விற்ற வாலிபர் கைது

என்.ஆர்.புராவில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தினத்தந்தி

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா கொப்பா சாலையில் ஒருவர் நின்று கஞ்சா விற்பனை செய்வதாக என்.ஆர்.புரா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்தப்பகுதியில் சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார், அந்த நபர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். அப்போது அந்த பையில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் பிரகலாத் (வயது 25) என்பதும், அவர் அங்கு நின்று கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்