தேசிய செய்திகள்

ரெயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு - முதன்முதலாக தேஜஸ் ரெயிலில் அறிமுகம்

ரெயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டம் முதன்முதலாக தேஜஸ் ரெயிலில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதுடெல்லி,

டெல்லி, லக்னோ இடையே தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை இந்திய ரெயில்வேயின் துணை அமைப்பான இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.) வரும் 4-ந் தேதி தொடங்குகிறது.

இந்த ரெயிலில் பயணம் செய்கிற பயணிகளுக்கு தலா ரூ.25 லட்சம் இலவச காப்பீட்டு வசதி வழங்கப்படுகிறது. இந்த வசதியை இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் வழங்குவது இதுவே முதல் முறை.

பயணத்தின்போது பயணிகளின் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனாலும், அது காப்பீட்டு வரம்புக்குள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக போய்ச்சேர்ந்தால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரெயில் தாமதமாக போய்ச் சேர்ந்தால் பயணிகளுக்கு இழப்பீடு என்ற சலுகையும் புதியதுதான்.

1 மணி நேரத்துக்கு மேலாக ரெயில் தாமதமாக போய்ச் சேர்ந்தால் பயணிகளுக்கு தலா ரூ.100, 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் ரூ.250 இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்