தேசிய செய்திகள்

நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதாவுடன் சேரமாட்டார் தேஜஸ்வி யாதவ் உறுதி

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதா அணியில் சேருவார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜனதா அணியில் சேருவார் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில், பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் பேட்டியளித்த துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

நிதிஷ்குமார் மீண்டும் பா.ஜனதா அணியில் சேரமாட்டார். எங்கள் மகாகூட்டணி வலிமையாக உள்ளது. பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றி, வலிமையான அரசை நடத்தி வருகிறோம். சிலர் வதந்தியை கிளப்பினாலும், எந்த சந்தேகத்துக்கும் இடம் வேண்டாம்.

அடுத்த வாரம் நடக்கும் 2 தொகுதிகளின் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணியே வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்