தேசிய செய்திகள்

தெலுங்கானா: அரசு விழாவில் முதல் மந்திரி காலில் விழுந்த கலெக்டர்

தெலுங்கானாவில் அரசு விழா ஒன்றில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் காலில் விழுந்து கலெக்டர் ஆசி பெற்றார்.

தினத்தந்தி

சித்திபேட்,

தெலுங்கானாவின் சித்திபேட் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக திறப்பு விழாவில் முதல் மந்திரி சந்திரசேகர ராவ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மந்திரிகள் மற்றும் பிற அரசு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில், சித்திபேட் மாவட்ட கலெக்டர் வெங்கடராம ரெட்டி முதல் மந்திரியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். நிகழ்ச்சியில் சமூக இடைவெளி விதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன. இதனிடையே, ஒருங்கிணைந்த மாவட்ட அலுவலகங்கள், மாவட்ட காவல் துறை ஆணையரக வளாகம் மற்றும் எம்.எல்.ஏ. முகாம் அலுவலகம் ஆகியவை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காலில் விழுந்தது பற்றி கலெக்டர் வெங்கடராம ரெட்டி கூறும்பொழுது, தெலுங்கானாவின் குழந்தையாக, அதிகாரியாக, மாநில வளர்ச்சியை காணும் ஆசி பெற்றுள்ளேன். தெலுங்கானாவில் நடந்து வரும் வளர்ச்சிக்கு முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அவர்களே காரணம்.

அனைத்து பிரிவு மக்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்காக பணியாற்றி கொண்டிருக்கும் அவரிடம் இருந்து நான் ஆசி பெற்றுள்ளேன். வயது முதிர்ந்தவர்களிடம் இருந்து ஆசி பெறுவது தெலுங்கானாவின் மரபு. அவரை எனது தந்தை போன்று உணர்கிறேன். இதனை ஒரு பெரிய விசயம் ஆக்குவது என்பது சரியாகாது என்று கூறியுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு