தேசிய செய்திகள்

பிரதமர் மோடியுடன் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் சந்திப்பு

பிரதமர் மோடியை தெலுங்கானா முதல் மந்திரியும் ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவருமான சந்திர சேகர் ராவ் சந்தித்துப் பேசினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லிக்கு நேற்று தனி விமானத்தில் சென்றார். நேற்று மாலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கான பேரிடர் மேலாண்மை நிதியை விடுவிக்க சந்திரசேகர் ராவ் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திரசேகர் ராவ் இன்று சந்தித்துப் பேசினார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பாஜகவும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியும் காரசாரமாக மோதிக்கொண்ட நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்