தேசிய செய்திகள்

காஷ்மீர் என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் தெலுங்கானா நபர்!

காஷ்மீர் ஆனந்த்நாக் என்கவுண்டரில் தெலுங்கானாவை சேர்ந்தவர் உள்பட 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். #AnantnagEncounter

ஸ்ரீநகர்,

மார்ச் 11-ம் தேதி ஆனந்த்நாக்கில் நடைபெற்ற என்கவுண்டரில் பாதுகாப்பு படையினர் மூன்று பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினர். இதில் இரண்டு பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டது. ஒருவர் ஸ்ரீநகரின் சவுரா பகுதியை சேர்ந்த இசா பாஸ்லி எனவும் மற்றொருவர் கோகெர்நாக் பகுதியை சேர்ந்த சையத் ஓவைசி எனவும் அடையாளம் காணப்பட்டது. இப்போது மூன்றாவது நபர் யாரென்று அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த முகமது தவுபிக் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

26 வயதான முகமது தவுபிக் தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி-கொத்தகூடம் மாவட்டம் மானுகுவை சேர்ந்தவர் என தெரியவந்து உள்ளது. காஷ்மீரை தலைமையகமாக கொண்டு செயல்படும் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய அன்சார் காஸ்வாத்-அல்-ஹிண்ட் அமைப்பை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது. கொத்தகூடம் மாவட்ட எஸ்.பி. இந்தியா டுடே செய்தி நிறுவனத்திற்கு அளித்து உள்ள பேட்டியில், முகமது தவுபிக் சமூக வலைதளம் மூலமாக ஈர்க்கப்பட்டு பின்னர் காஷ்மீரில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து உள்ளான், என கூறிஉள்ளார்.

முகமது தவுபிக் 2017-ம் ஆண்டு பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, காஷ்மீர் சென்று உள்ளார் என தெரியவந்து உள்ளது.

தெலுங்கானா போலீஸ் காஷ்மீர் போலீசுடன் தொடர்பில் உள்ளது. முகமது தவுபிக் தொடர்பான மேலும் தகவல்களை பெறவும், விசாரணையை விஸ்தரிக்கவும் தெலுங்கானா போலீஸ் தகவல்களை பெற்று வருகிறது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு