கரிம்நகர்,
தெலுங்கானாவில் மாவோயிஸ்டு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்ததாக மஞ்சேரியல் மாவட்டத்தின் கியாத்தனாபள்ளியை சேர்ந்த ரவிந்தர் ராவ் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்திருந்தனர். அவரிடம் பின்னர் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் அவர் அளித்த தகவலின்பேரில், மாவோயிஸ்டு இயக்கத்தின் முன்னணி தலைவர்களாக விளங்கி வரும் தம்பதியான சுப்ரமணியம்-விஜயலட்சுமி ஆகியோரை விஜயவாடா ரெயில் நிலையத்தில் வைத்து போலீசார் நேற்று கைது செய்தனர்.
மாவோயிஸ்டு மத்தியக்குழு உறுப்பினராக இருந்த சுப்ரமணியம் கடந்த 2011-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 2019-ல் விடுதலையான அவர், தனது மனைவியும், மண்டல குழு உறுப்பினருமான விஜயலட்சுமியுடன் இணைந்து மீண்டும் மாவோயிஸ்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.