தேசிய செய்திகள்

தெலுங்கானா ராஷ்டிர சமிதி செயல் தலைவராக சந்திர சேகர ராவ் மகன் நியமனம்

தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவராக முதல்-மந்திரி சந்திர சேகர ராவின் மகனும், சிர்சில்லா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமா ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியை கைப்பற்றியது.

அதனை தொடர்ந்து சந்திர சேகர ராவ், 2-வது முறையாக மாநில முதல்-மந்திரியாக நேற்று முன்தினம் பதவி ஏற்றார்.

இந்தநிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் செயல் தலைவராக முதல்-மந்திரி சந்திர சேகர ராவின் மகனும், சிர்சில்லா தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமா ராவ் நியமிக்கப்பட்டு உள்ளார்.