தேசிய செய்திகள்

‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டம்

விவசாயிகளின் ‘பாரத் பந்த்’ முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினத்தந்தி

ஐதராபாத்,

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட வட மாநில விவசாயிகள் போர்க்கொடி தூக்கி, டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் டெல்லி எல்லைப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 சுற்றுப் பேச்சு முடிந்தபோதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறக் கோரி 8-ம் தேதி(இன்று) விவசாயிகள் பாரத் பந்த் அதாவது நாடு முழுவதும் வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளனர். விவசாயிகள் நடத்தும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு இடதுசாரிகள், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.

இந்த நிலையில் இன்று விவசாயிகள் அறிவித்த பாரத் பந்த் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, மகாராஷ்ரா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடதுசாரி கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்கம் மற்றும் மராட்டிய மாநிலத்தில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சித்தராமையா, பி.கே.ஹரிபிரசாத், ராமலிங்க ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதற்கிடையில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டி.ஆர்.எஸ்) கட்சி சார்பில் விவசாயிகள் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் தெலுங்கானா முதல்வருமான் சந்திரசேகர் ராவ் நேற்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்று டி.ஆர்.எஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கே.கவிதா, கே.டி.ராமாராவ் உள்ளிட்டோர் தலைமையில் தெலங்கானாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியபடி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்