ஐதராபாத்,
மஹ்பூப்நகர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பா.ஜ.க.வின் மற்றொரு பிரிவு என சாடினார். இது பற்றி அவர் பேசுகையில், டி.ஆர்.எஸ். என்பது தெலுங்கானா ராஷ்டிர சமிதி அல்ல. தெலுங்கானா ராஷ்டிர சங் பரிவார். அது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் பி பிரிவு ஆகும் என கூறினார்.