தேசிய செய்திகள்

கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை காப்பாற்ற முயன்ற நபர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

தெலுங்கானாவில் கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை காப்பாற்ற முயன்ற சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது செல்போனை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

முன்னதாக ஐதராபாத்தில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றும் ஸ்ரீகாந்த் நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் ரெயில் ஏறினார். சாதவாகனா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரங்கலுக்கு சென்று கொண்டிருந்த அவர், கம்பார்ட்மென்ட் வாசலில் உட்கார்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது காசிப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கொள்ளையர்கள் அவரது செல்போனை பறிக்கும் நோக்கத்தில் கட்டையால் தாக்கினர். இந்த நிலையில் கீழே விழுந்த செல்போனை பிடிக்க முயன்ற ஸ்ரீகாந்த் தண்டவாளத்தில் தவறி விழுந்து ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை