தேசிய செய்திகள்

தெலுங்குதேசம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

தெலுங்குதேசம், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும் என கட்சித்தொண்டர்கள் மத்தியில் பேசிய சந்திரபாபு நாயுடு கூறினார்.

தினத்தந்தி

அமராவதி,

நாடாளுமன்ற தேர்தலிலும், ஆந்திர சட்டசபை தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.

தேர்தல் தோல்விக்கு பின்னர், குண்டூரில் நேற்று நடந்த கட்சி நிறுவனர் என்.டி.ராமாராவ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், புதிய அரசு பதவி ஏற்க உள்ளது. அவர்களுக்கு நாம் கொஞ்சம் அவகாசம் தர வேண்டும். அவர்கள் சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். அவர்கள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற விடுவோம் என்றார்.

மேலும், நமது கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாம் மக்களுக்கு பணி ஆற்றுவோம். நாம் நமது தவறுகளை ஆராய்ந்து சரி செய்வோம். மக்கள் பணியில் நம்மை மறுஅர்ப்பணம் செய்வோம் எனவும் குறிப்பிட்டார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து