தேசிய செய்திகள்

உ.பி.யில் கோவில் அர்ச்சகர் கழுத்து நெரித்துக் கொலை

அர்ச்சகர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷஹர் மாவட்டத்தில் உள்ள ஷிகார்பூர் கோட்வாலி பகுதியில் உள்ள கிராமத்தில் புகழ்பெற்ற தக்வாலே கோவிலின் அர்ச்சகர் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

50 வயதான அர்ச்சகர் அசோக் குமாரின் உடல் கோயிலுக்கு அருகில் உள்ள வயலில் கழுத்தில் காயங்களுடன் காணப்பட்டது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கோயில் வேலைக்காக அன்சூரு கலன் கிராமத்தில் வந்து தங்கியுள்ளதாக தேஹத் காவல் கண்காணிப்பாளர் ஹேந்திர குமார் கூறினார்.

கடந்த ஜனவரி 1-ம் தேதி குமார் ரவிடாஸ் கோவிலை அழித்ததாகவும், இந்த சம்பவத்தில் காவல்துறையினர் அவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...