தேசிய செய்திகள்

பிரியாணி சூடாக இல்லாததால் பயங்கர மோதல்... வாடிக்கையாளர்களை தாக்கிய ஓட்டல் ஊழியர்கள்...!

வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினத்தந்தி

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பழமை வாய்ந்த 'கிராண்ட்' ஓட்டல் இயங்கி வருகிறது. இந்த ஓட்டலில் ஐதராபாத் பிரியாணி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். புத்தாண்டு தினத்தையொட்டி ஓட்டலில் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது வாடிக்கையாளர்கள் கும்பலாக பிரியாணி சாப்பிட வந்தனர். அவர்களுக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.

அந்த பிரியாணி சூடாகவும், ருசியாகவும் இல்லை என வாடிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது ஓட்டல் ஊழியர்கள் உருட்டு கட்டைகளை எடுத்துக்கொண்டு வாடிக்கையாளர்களை தாக்கினர்.

மேலும் சேர்களை தூக்கி அவர்கள் மீது வீசினர். இதனைக் கண்ட பொதுமக்கள் ஓட்டலில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் அனைத்து சென்று விசாரித்தனர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் ஓட்டல் ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் மீது கட்டை மற்றும் சேர்களை கொண்டு தாக்குவது பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரியாணி சூடாக இல்லை என்றதால் இந்த பிரச்சனை நடந்துள்ளது.முதலில் வாடிக்கையாளர் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திடீரென இந்த வாடிக்கையாளர் ஓட்டல் ஊழியரை தாக்கியதால் நிலைமை மோசமாகியுள்ளது.இது தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.வாடிக்கையாளர்களை ஓட்டல் ஊழியர்கள் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு