தேசிய செய்திகள்

ஸ்ரீநகர் விமான நிலையமே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் இலக்கு

ஸ்ரீநகர் விமான நிலையம் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளின் இலக்காக இருந்து உள்ளது என உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் சர்வதேச விமான நிலையம் அருகே ஹூம்கமா பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையின் முகாம் மீது நேற்று பாகிஸ்தானின் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் துரதிஷ்டவசமாக பாதுகாப்பு படை வீரர் பிகே யாதவ் வீர மரணம் அடைந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே எல்லையை கடந்து காஷ்மீருக்குள் உளவு பார்த்து தாக்குதல் நடத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.

நேற்று ஸ்ரீநகர் எல்லைப் பாதுகாப்பு படை முகாமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் உண்மையான இலக்கு ஸ்ரீநகர் விமான நிலையமாகும் என உளவுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவித்து உள்ளன. ஜெய்ஷ்-இ-முகமதுவின் அப்சல் குரு படை அப்பகுதியை முன்னதாகவே உளவு பார்த்து உள்ளனர் என உயர்மட்ட உளவுத்துறை தகவல்கள் தெரிவித்து உள்ளன. ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் விமான நிலையம் மிகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையம் சிஆர்பிஎப் படை வீரர்களால் பாதுகாக்கப்படுகிறது,

விமான நிலையத்தில் தொழில்நுட்ப பிரிவு மற்றும் பிற பிரிவுகள் எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் விமானப்படையின் வசம் உள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்த அப்பகுதியில் உளவு பார்த்து உள்ளனர், பாதுகாப்பு வளையத்தை உடைத்து விமான நிலையம் அருகே கூட செல்ல முடியாது என புரிந்துக் கொண்ட பின்னர் எல்லைப் பாதுகாப்பு படை முகாமை தேர்வு செய்து உள்ளனர், என உளவுத்துறை மூத்த அதிகாரி கூறிஉள்ளார். பாகிஸ்தானில் இருந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் இரு குழுவாக ஆகஸ்ட் 16 மற்றும் 17-ம் தேதிகளில் ஊடுருவி உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து