தலாய்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் என்.எல்.எப்.டி. என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தலாய் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பி.எஸ்.எப். வீரர்கள் 2 பேர் என்.எல்.எப்.டி. அமைப்பினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டு உள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களில் ஒருவர் துணை ஆய்வாளர் ஆவார். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்பு பயங்கரவாதிகள் பி.எஸ்.எப். வீரர்களின் இரண்டு ஆயுதங்களை எடுத்து கொண்டு தப்பி ஓடியுள்ளனர் என பி.எஸ்.எப். வட்டாரம் தெரிவித்து உள்ளது.