ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் லால் சவுக் பகுதியில் மைசுமா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் மறைந்திருந்து திடீரென வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சி.ஆர்.பி.எப்.) 2 பேர் காயமடைந்து உள்ளனர். எனினும் வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.
இதேபோன்று, புல்வாமா மாவட்டத்தின் லஜூரா கிராமத்தில் பயங்கரவாதிகள் திடீரென 2 பேர் மீது தாக்குதல் நடத்தினர். இதில், குடிமக்களில் 2 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அந்த பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.