தேசிய செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள், வெடிமருந்துகளை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

தினத்தந்தி

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

பூஞ்ச் மாவட்டத்தின் சூரன்கோட் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கு குழியில் பயங்கரவாதிகள் மறைத்து வைத்திருந்த ஒரு கைத்துப்பாக்கி, 4 கைக்யெறி குண்டுகள், 3 ஏகே-47 துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர்.

மேலும், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என போலீசார் தெரிவித்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்