ஸ்ரீநகர்
சமீபகாலமாக ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கியமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட நிலையில், காஷ்மீரில் அந்த இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் பொறுப்பை நஜாரிடம் இயக்கத்தின் மேலிடம் அளித்தது.
அதன்படி, இயக்க பொறுப்பை ஏற்பதற்காக, பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக அவர் காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்றார். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் அவர் பலியானார்.
நஜார், கடந்த 17 ஆண்டுகளில், 50-க்கும் மேற்பட்ட கொலைகளில் சம்பந்தப்பட்டவர். எனவே, அவர் சுட்டுக்கொல்லப்பட்டது, தங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று பாரமுல்லா மாவட்ட மூத்த போலீஸ் சூப்பிரண்டு இம்தியாஸ் உசைன் தெரிவித்தார்.