ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிகளால் சுட்டு நடத்திய தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து உள்ளார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இதேபோன்று பயங்கரவாதிகளின் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவரும் கொல்லப்பட்டார். இதனை அடுத்து அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர்.