தேசிய செய்திகள்

ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

காஷ்மீர் ராணுவ முகாமுக்குள் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

ஜம்மு,

காஷ்மீர் மாநிலம் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலையில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் பயங்கரவாதிகள் சிலர் நுழைந்தனர். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த அவர்கள், அங்கிருந்த ராணுவ குடியிருப்புகள் மீது கையெறி குண்டுகளை வீசியும், கண்ணில் பட்ட அனைவரையும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இதில் ஒரு அதிகாரி உள்பட 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் பெண்கள், குழந்தைகள் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தலையில் குண்டு பாய்ந்த ஒரு சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

முகாமில் கொடூர தாக்குதலை அரங்கேற்றிய பயங்கரவாதிகள், அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் சென்று பதுங்கிக்கொண்டனர். அவர்களை வீழ்த்துவதற்காக கூடுதல் வீரர்களும், ராணுவ சிறப்பு கமாண்டோ படையினரும் பயங்கர துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். நேற்று இரவுக்குப்பின் அங்கு துப்பாக்கிச்சண்டை எதுவும் நடைபெறவில்லை.

எனினும் அங்கு வேறு பயங்கரவாதிகள் யாரும் பதுங்கி உள்ளனரா? என்பதை கண்டறியவும், உயிரிழந்தவர்களின் உடலை மீட்பதற்காகவும் முகாம் முழுவதும் தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது மேலும் ஒரு ராணுவ அதிகாரி, 2 வீரர்கள் மற்றும் ஒரு வீரரின் தந்தை என 4 பேரின் உடல்கள் நேற்று கண்டெடுக்கப்பட்டன.

இதன் மூலம் பயங்கரவாதிகள் தாக்கியதில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளின் முதற் கட்ட தாக்குதலில் பலியானவர்கள் ஆவர்.

முன்னதாக முகாமில் உள்ள குடியிருப்புகளில் தங்கியிருந்த வீரர்களின் குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டனர். எனினும் இன்னும் சில குடியிருப்புகளில் மக்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ராணுவம் தீவிர சோதனையில் ஈடுபட்டு உள்ளது.

இதற்கிடையே காயமடைந்த கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தாய்-சேய் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்