தேசிய செய்திகள்

அடுத்த மாதம் வாக்கு இயந்திரங்களின் சோதனை - சத்யபிரதா சாகு

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கியுள்ளதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் தேவை என்பதை, மதிப்பீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

மதிப்பீட்டு பணிகள் முடிவடைந்ததும் தேவையானதைவிட 35 சதவீத அதிக இயந்திரங்கள், மாவட்டங்கள் தோறும் உள்ள தேர்தல் துறைக்குச் சொந்தமான கிடங்குகளில் வைக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், அந்த இயந்திரங்களில் முதல் நிலை சோதனை நடத்தப்படும் எனவும் தேர்தலுக்கான பணிகள் தொடர்பாக மண்டல வாரியாக ஆய்வு செய்து வருவதாகவும் சத்ய பிரதா சாகு கூறியுள்ளார். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு