தேசிய செய்திகள்

நிழலுலக தாதா ரவி புஜாரி ரூ.2 கோடி மிரட்டல்; கட்டுமான தொழில் அதிபர் போலீசில் புகார்

நிழலுலக தாதா ரவி புஜாரி ரூ.2 கோடி கேட்டு மிரட்டினார் என்று கட்டுமான தொழில் அதிபர் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். #RaviPujari

மும்பை,

மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்தின் மும்ரா நகரை சேர்ந்த கட்டுமான தொழில் அதிபர் ஒருவர் போலீசாரை தொடர்பு கொண்டு மிரட்டல் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த ஜனவரியில் இருந்து தனக்கு பல்வேறு தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பேசிய நபர் தன்னை புஜாரி என கூறி கொண்டு ரூ.2 கோடி பணம் கேட்டு மிரட்டினார் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

நில விவகாரம் ஒன்றில் இருந்து ஒதுங்கி இருக்கும்படியும் அந்த நபர் மிரட்டினார். தன்னை கொல்வதற்கு மற்றொரு கட்டுமான அதிபர் ரூ.3 கோடி பணம் தர தயாராக இருக்கிறார் என கூறி புஜாரி மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணத்தினை தரவில்லை எனில் கொன்று விடுவேன் என புஜாரி அச்சுறுத்தல் விடுத்துள்ளார் என்றும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தானே நகர போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...