தேசிய செய்திகள்

‘பயங்கரவாதி’ என்று விமர்சனம்: பிரக்யா சிங் பற்றிய கருத்தில் உறுதியாக இருக்கிறேன் - ராகுல் காந்தி பேட்டி

பிரக்யா சிங் பற்றி ‘பயங்கரவாதி’ என்று விமர்சனம் செய்த தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங்கை பயங்கரவாதி என்று கூறிய ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. ஒருவர் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

கோட்சேவை போலவே, பிரக்யா சிங்கும் வன்முறையில் நம்பிக்கை கொண்டுள்ளார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே, நான் சொன்ன கருத்தில் உறுதியாக இருக்கிறேன். இதுதொடர்பாக பா.ஜனதா என்ன செய்ய விரும்பினாலும் செய்யட்டும். நான் வரவேற்கிறேன். அதில் எந்த பிரச்சினையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை