கோப்புப்படம்  
தேசிய செய்திகள்

காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் தொடங்கியது

காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது. இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

இதற்கிடையில், காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் இன்று (30-10-2023) நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுவையை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது. 

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்