தேசிய செய்திகள்

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த குற்றச்சாட்டு: நிர்மலா தேவி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க கோரும் மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள உதவி பேராசிரியை நிர்மலா தேவி மீதான வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.க்கு மாற்ற கோரும் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீதான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி வக்கீல் ஜெய் சுகின் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், உதவி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை வெளியாகும். எனவே வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணையில் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.

இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது,

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள், சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விட்டதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.


அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்