தேசிய செய்திகள்

நடுவானில் உயிர் இழந்த விமானப் பயணி

தோகாவிலிருந்து பாங்காங் சென்ற விமானத்தில் இருந்த பயணி ஒருவர் நடுவானில் உயிர் இழந்தார்.

ஐதராபாத்,

கத்தார் விமானத்துறைக்கு சொந்தமான விமானம் ஒன்று தோகாவிலிருந்து பாங்காங்கிற்கு நேற்று சென்றது. அதில் உக்ரைன் நாட்டை சேர்ந்த பயணி, கொன்கினா (வயது 69) என்பவர் பயணம் செய்தார்.

அதிகாலை 1.30 மணிக்கு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுயநினைவை இழந்தார். இதனால் விமானம் ஐதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. பின் அவரை மருத்துவர்கள் குழு பரிசோதனை செய்தது. இதில் கொன்கினா ஏற்கனவே விமானத்தில் மாரடைப்பால் உயிர் இழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். விசாரணையில் அவருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்து உள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து உக்ரைனில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவிற்கு கத்தார் விமானத்துறையால் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...