புதுடெல்லி,
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி இந்தியா கேட் பகுதியில் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை, அங்குள்ள புல்வெளியில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
90 சதவீத தீக்காயங்களுடன் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது பெயர் கார்த்திக் மெஹர் என்று தெரிய வந்தது. இருப்பினும், குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கும், அவரது தற்கொலை முயற்சிக்கும் தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்தனர்.