கோப்பு படம் 
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் செப்டம்பர் 12ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்-மத்திய அரசு

கொரோனா விதிகளை பின்பற்றி நீட் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் மே முதல் வாரத்தில் தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) சார்பில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கிடையே, கரோனா பரவலால் கடந்த ஆண்டு நீட் தேர்வு பலமுறை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் செப்.13-ம் தேதி நடத்தப்பட்டது.

இந்த நிலையில், நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத்தேர்வு செப்டம்பர் 12-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் நாளை மாலை 5 மணி முதல் தேசிய தேர்வு முகமை ( NTA ) இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு 198 -நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் எனவும் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து