தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களின் சேமிப்புகள் பாதுகாப்பாக உள்ளது: பஞ்சாப் நேஷனல் வங்கி நிர்வாகம் விளக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்களின் சேமிப்புகள் பாதுகாப்பாக உள்ளது என்று வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. #PNBfraud

தினத்தந்தி

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீசுவரருமான நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இவ்வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி, தொழில் அதிபர் மெகுல் சோஷி முக்கிய புள்ளியாக உள்ளனர். சிபிஐ இதுதொடர்பாக வங்கி அதிகாரிகளையும் கைது செய்து உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழலில் சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை சோதனை மற்றும் விசாரணையில் தீவிரமாக களமிறங்கி உள்ளது. நேற்று மாலை தெரிவிக்கப்பட்ட தகவலின்படி அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்து உள்ள வைரம், தங்கம் மற்றும் விலைமதிப்புமிக்க பிற கற்களின் விலை ரூ. 5,674 கோடி என குறிப்பிடப்பட்டு இருந்தது. சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மோசடி நடைபெற்ற பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையையும் சிபிஐ சீல் வைத்தது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்றுள்ள இந்த பெருமளவு மோசடி அந்த வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருந்த நிலையில், வாடிக்கையாளர்களின் சேமிப்புகள் பாதுகாப்பாக உள்ளதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், வங்கியில் இருந்து பணம் எடுக்க வாடிக்கையாளர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்றும் வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்