தேசிய செய்திகள்

மேற்கு வங்காள கவர்னருக்கு எதிராக ‘கருப்புக்கொடி’ போராட்டம்

மேற்கு வங்காள கவர்னருக்கு எதிராக ‘கருப்புக்கொடி’ போராட்டம் நடத்தப்பட்டது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள தோம்கல் பகுதியில் பெண்கள் கல்லூரி ஒன்று இருக்கிறது. அங்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவிற்காக அம்மாநில கவர்னர் ஜக்தீப் தாங்கர் வந்திருந்தார். அப்போது அவரது வாகனம் கடந்து செல்லும் வழியில் சிலர் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடி காட்டினர். திரும்பிப்போ என்ற வாசக பதாகைகளையும் கைகளில் ஏந்தி நின்றனர்.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. இருந்தாலும் மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜக்தீப் தாங்கருக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. அதன் விளைவாக இந்த கருப்புக்கொடி போராட்டம் நடந்திருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்