தேசிய செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி 3-வது நாளாக நிறுத்தம்

மோசமான வானிலை எதிரொலியாக, விமான விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடல்களை மீட்கும் பணி 3-வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

அசாமின் ஜோர்கட் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 3ந்தேதி அருணாசல பிரதேசத்துக்கு சென்ற ஏ.என்.32 ரக விமானப்படை விமானம் ஒன்று அருணாசல பிரதேசத்தின் சியாங் மாவட்ட எல்லையான கட்டே பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் கோவையை சேர்ந்தவர் உள்பட, விமானத்தில் இருந்த 13 வீரர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்களை மீட்கும் பணி கடந்த 13ந்தேதி தொடங்கியது. ஆனால் மலைப்பாங்கான அந்த பகுதியில் சிதறிக்கிடக்கும் வீரர்களின் உடல்களை மீட்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த பகுதியில் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை நிலவுவதால் கடந்த 15ந்தேதி முதல் மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்த வானிலை சீரடையாததால் தொடர்ந்து 3வது நாளாக நேற்றும் மீட்பு பணிகள் நடக்கவில்லை. மழை மற்றும் அடர் மேகமூட்டம் காரணமாக உடல்களை மீட்பதற்காக ஹெலிகாப்டர்களை அந்த பகுதிக்கு இயக்க முடியவில்லை. மேலும் சம்பவம் நடந்த இடம் செங்குத்தான மலைப்பிரதேசமாக இருப்பதாலும் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு