தேசிய செய்திகள்

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி

குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்ற சிறுவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போபால்,

பட்டம்விட்டு விளையாடிக்கொண்டிருந்த 13 வயது சிறுவன் குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கரோத் போலீஸ் நிலையம் எல்லைக்கு உட்பட்ட சத்கேடா கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஷாபீர் ஹூசைன். இந்த நிலையில் சிறுவன் பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த போது பட்டம் காணாமல் போயுள்ளது. பட்டத்தில் இருந்த நூலைப் பின்தொடர்ந்து சென்ற சிறுவன் பட்டம் குளத்தில் விழுந்துள்ளதை கண்டுள்ளான்.

இதையடுத்து குளத்தில் விழுந்த பட்டத்தை எடுக்க முயன்றபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...