தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 30-ந்தேதி தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா 30-ந்தேதி தொடங்க உள்ளது.

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 30-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது. விழாவையொட்டி தினமும் காலையும், மாலையும் வீதியுலா நடக்கிறது.

முக்கிய நிகழ்வாக அக்டோபர் 4-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 12 மணி வரை கருட வாகன வீதிஉலா நடக்கிறது. 5-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா, 6-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா, 7-ந்தேதி காலை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா, 8-ந்தேதி காலை சக்கர ஸ்நானம், இரவு கொடியிறக்கம் நடக்கிறது.

மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடனும் சிறப்பு அலங்காரத்திலும், பிரத்யேக அவதாரத்திலும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்