தேசிய செய்திகள்

புதுப்பெண் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்

காவேரி லே-அவுட்டில் புதுப்பெண் தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

தினத்தந்தி

பெங்களூரு;

ஆந்திர மாநிலம் புங்கனூர் அருகே தின்னிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரெட்டி பிரசாத். இவருக்கு ஆயிஷா பானு என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து இருந்தது. இந்த நிலையில் ரெட்டி பிரசாத்துக்கும், புங்கனூரை சேர்ந்த கவுதமி(வயது 24) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இதனால் கவுதமியும், ரெட்டி பிரசாத்தும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பெங்களூரு காவேரி லே-அவுட்டில் உள்ள ஒரு வீட்டில் ரெட்டி பிரசாத், ஆயிஷா பானு, கவுதமி ஆகிய 3 பேரும் வசித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் பிரசாத்தும், ஆயிஷா பானுவும் சேர்ந்து கவுதமிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த கவுதமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கவுதமியின் தந்தை அளித்த புகாரின்பேரில் மாரத்தஹள்ளி போலீசார் ரெட்டி பிரசாத், ஆயிஷா பானு மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு