தேசிய செய்திகள்

தலைநகர் ‘டெல்லி’யின் பெயர் ‘டில்லி’ என்று மாறுமா?

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் பாரதீய ஜனதா உறுப்பினர் விஜய் கோயல் பேசினார். அப்போது அவர் நாட்டின் தலைநகரின் பெயர் ‘டெல்லி‘ என்று இருப்பதை ‘டில்லி‘ என்று மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

விஜய் கோயல் மேலும் பேசுகையில், டெல்லி என்ற பெயர் எப்படி வந்தது என்பது உறுதியாக தெரியாவிட்டாலும், டெல்லியை ஆண்ட மவுரிய வம்ச மன்னரான டில்லு என்பவரின் பெயர் அதற்கு சூட்டப்பட்டு டில்லி என மாறியதாக பொதுவாக கூறப்படுகிறது.

இருப்பினும், டெல்லியா, டில்லியா என்பதில் பலருக்கு குழப்பம் இருந்து வருகிறது. தலைநகரின் பெயர், அதன் கலாசாரத்தையும், வரலாறையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். எனவே, டெல்லியின் பெயரை டில்லி என்று மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உள்துறை ராஜாங்க மந்திரி நித்தியானந்த் ராய் டில்லி என பெயர் மாற்றக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தால் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்து அதுகுறித்து உரிய முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு