தேசிய செய்திகள்

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு - சுப்ரீம் கோர்ட்டில் ஏப்ரல் 8-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கினை, சுப்ரீம் கோர்ட் ஏப்ரல் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கல்வி, வேலைவாய்ப்பில் பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிராக பொதுநல பிரசாரம், சமத்துவத்துக்கான இளைஞர்கள் அமைப்புகள் மற்றும் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.பாரதி, ஜி.கருணாநிதி உள்ளிட்டோர் தரப்பில் 24 பொதுநல மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த ஜனவரி 25-ந் தேதி நடைபெற்ற போது பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், இந்த மனுக்கள் மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, எஸ்.அப்துல் நஜீர் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஏப்ரல் 8-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?