தேசிய செய்திகள்

மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி என கூறிய தொழில் நுட்ப வல்லுனர் மீது வழக்கு - தேர்தல் கமிஷன் நடவடிக்கை

மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி என கூறிய தொழில் நுட்ப வல்லுனர் மீது வழக்குப்பதிவு செய்து தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி செய்து வெற்றி பெற்றது என்று மின்னணு தொழில்நுட்ப வல்லுனர் என்று தன்னை கூறிக்கொள்கிற சையது சுஜா, லண்டனில் இருந்து அளித்த பேட்டி நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதில் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்குமாறு டெல்லி போலீசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம் எழுதி உள்ளது.

அந்த கடிதத்தில் சையது சுஜா, வதந்திகளை பரப்பி பதற்றத்தை உருவாக்கும் விதத்தில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 505 (1)-ஐ மீறி உள்ளார். அவரது கருத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்