தேசிய செய்திகள்

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பான வழக்கு 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அணு கழிவுகளை நீக்குவது தொடர்பாக பூவலகின் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ஜி.சுந்தரராஜன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அணு கழிவுகளை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் மேலும் 2 வாரங்கள் அவகாசம் கோரி எழுத்து வடிவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கின் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்