புதுடெல்லி,
2009ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை, இவர் 220 பேருக்கு ரூ.192 கோடியே 98 லட்சம் கடன் கொடுத்துள்ளார். இவை போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டன. இதற்கு பட்டு ராமராவும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. கடன் பெற்றவர்கள், அதை வேறு தேவைகளுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது.
கடனை திருப்பிச் செலுத்தாததால், அது வட்டியுடன் சேர்ந்து ரூ.445 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே, இந்த மோசடி தொடர்பாக பட்டு ராமராவ் உள்பட 31 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.