புதுடெல்லி,
நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சி.பி.ஐ.யில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு மத்திய பணியாளர் நலத்துறை இணை மந்திரி ஜிதேந்திரசிங் பதிலளித்தார்.
அவர் அளித்த பதிலில், கடந்த டிசம்பர் 31-ந் தேதி நிலவரப்படி, சி.பி.ஐ.யில் 1,117 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவற்றில் 18 வழக்குகள், 7 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் உள்ளதாகவும் மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் தெரிவித்துள்ளார்.